கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இணைந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் பிராவோ !!!

Update: 2024-09-28 08:30 GMT

டுவைன் பிராவோ

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ (40 வயது), அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். கரீபியன் பிரிமியர் லீக் தொடருடன் ஓய்வு பெறத் திட்டமிட்டிருந்த அவர், காயம் காரணமாக விலகியுள்ளார். தனது ஓய்வு முடிவை உருக்கமான கடிதம் மூலமாக அறிவித்துள்ள அவர், ‘எனது மனம் தொடர்ந்து விளையாட விரும்பினாலும், உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. வலிகளையும், அழுத்தங்களையும் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலையில் கனத்த இதயத்துடன் கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறேன்’என கடிதத்தில் கூறி இருந்தார்.

பிராவோ டி20 தொடர்களின் பைனலில் அதிக வெற்றிகளைக் குவித்த வீரராக (17) முதலிடம் வகித்து சிபிஎல் தொடரில் மட்டும் 5 கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 40 டெஸ்டில் 2200 ரன் & 86 விக்கெட், 164 ஒருநாளில் 2968 ரன் & 199 விக்கெட், 91 டி20ல் 1255 ரன் & 78 விக்கெட் என சர்வதேச களத்தில் அசத்தியுள்ளார். ஐபிஎல், சிபிஎல் உள்ளிட்ட உள்ளூர் டி20 தொடர்களிலும் ஆல் ரவுண்டராக முத்திரை பதித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற பிராவோ, அந்த அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். 2025 சீசனில் அவர் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இணைகிறார் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News