இன்றைய ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு - பும்ரா கேப்டனாக நியமனம் !!

Update: 2025-01-03 10:09 GMT
criket

சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க முடியாமல் ஏமாற்றம் அளித்தனர். முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்தியா –ஆஸ்திரேலியா இடையே 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ராகுல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன் எடுத்தார். ஜடேஜா 26, பும்ரா 20, வாஷிங்டன் சுந்தர் 14 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் போலண்ட் 4, ஸ்டார்க் 3, கம்மின்ஸ் 2 மற்றும் லயன் 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று நடந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுத்து பும்ரா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.

Tags:    

Similar News