இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை நீக்கிய இந்திய கால்பந்து சம்மேளனம் - அதிரடி நடவடிக்கை !!
By : King 24x7 Angel
Update: 2024-06-18 09:00 GMT
இகோர் ஸ்டிமாக்
இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக குரோஷியாவை சேர்ந்த 56 வயதான இகோர் ஸ்டிமாக் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரது ஒப்பந்தம் 2026-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையே, 2026-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்று 2-வது ரவுண்டில் கடந்த வாரம் நடந்த கத்தாருக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இகோர் ஸ்டிமாக்கை நீக்கி இந்திய கால்பந்து சம்மேளனம் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.