கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு: தமிழகம் 2-ம் இடம்!

Update: 2024-02-01 06:26 GMT

கேலோ இந்தியா

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களை பெற்று தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

முதல் முறையாக கேலோ இந்தியாவில் இந்த சாதனையை தமிழகம் படைத்துள்ளது. 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்றது. கடந்த மாதம் (ஜனவரி) 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் நடைபெற்றது. பல்வேறு வகையிலான விளையாட்டு பிரிவுகளில் இந்திய மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மொத்தம் 13 நாட்கள் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழகம், 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என மொத்தமாக 98 பதக்கங்களை வென்று இரண்டாம் இடம் பிடித்தது. முதல் இடத்தை மகாராஷ்டிராவும், மூன்றாம் இடத்தை ஹரியாணாவும் பிடித்துள்ளன.

Tags:    

Similar News