ராஜஸ்தான் அணியின் தொடர் வெற்றிக்கு குஜராத் முற்று வைக்குமா ? : இன்று பலப்பரீட்சை !

Update: 2024-04-10 10:11 GMT

ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் வலம் வருகிறது. ராஜஸ்தான் அணி 20 ரன் வித்தியாசத்தில் லக்னோவையும், 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவையும் அடுத்தடுத்து தோற்கடித்து சாய்த்த நிலையில் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெவ்வேறு வீரர் ஜொலித்து வெற்றிக்கு கணிசமான பங்களிப்பை அளித்ததோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றனர்.

குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. தனது முதலாவது ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய குஜராத் அணி அடுத்த ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடியது. கடந்த இரு ஆட்டங்களில் முறையே 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடமும், 33 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடமும் தோற்றது.

குஜராத் அணியில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் ராஜஸ்தானின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இல்லாவிட்டால் சிக்கல் தான்.

இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டத்திலும், ராஜஸ்தான் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றது.

ராஜஸ்தான் அணியின் தொடர் வெற்றிக்கு குஜராத் முற்றுப்புள்ளி வைக்குமா? என பொறுத்திருந்து பார்போம்.

Tags:    

Similar News