ஐ.சி.சி மகளிர் 20 உலகக்கோப்பை போட்டி : நாளை ஆரம்பம் !!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி மகளிர் 20 உலகக்கோப்பை போட்டியை 2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இங்கிலாந்தில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. கடைசியாக கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரை 8 - 20 உலகக்கோப்பைநடத்துள்ளது. ஒன்பதாவது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நாளை வியாழக்கிழமை தொடங்க இருக்கிறது.
வருகின்ற 20 ஆம் தேதி வரை துபாய், ஷார்ஜாவில் போட்டிகள் நடைபெறும். வங்கதேசத்தில் நடைபெற இருந்த போட்டி அரசியல் சுழல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது. 20 ஓவர் உலகக் கோப்பையில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 23 ஆட்டங்கள் நடக்கிறது. நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் வங்காளதேசம்-ஸ்காட் லாந்து (மாலை 3.30) பாகிஸ்தான்-இலங்கை (இரவு 7.30) அணிகள் மோதுகின்றன.