ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடர் - பாகிஸ்தானுடன் மோதிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி !!

Update: 2024-10-07 05:26 GMT

sports

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடர் துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடந்த நிலையில் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானுடன் நேற்று மோதிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததையடுத்து ரன் குவிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன் மட்டுமே எடுத்தது.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 106 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 29 ரன் எடுத்து காயம் காரணமாக ஓய்வு பெற்றார்.

இந்தியா 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது. தீப்தி ஷர்மா 7 ரன், சஜீவன் சஜனா 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. அருந்ததி ரெட்டி சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.

முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இந்தியா, 2வது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. அடுத்து 3வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியின் சவாலை எதிர்கொள்கிறது.

Tags:    

Similar News