ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடர் - இந்தியா-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை !!

Update: 2024-10-09 07:10 GMT

sports news

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதுகின்றனர்.

இந்தியா நடப்பு தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நிலையில் முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அடுத்த போட்டியில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய இந்திய வீராங்கனைகள், பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி அடைந்தது.

அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய, இந்திய அணி எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் வெற்றி அடையவேண்டும் கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில், இன்று இலங்கையை எதிர்கொள்ளும் இந்தியா, அக்.13ம் தேதி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தப்போகிறது.

இலங்கை இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. எனவே கவுரவம் காக்கும் முனைப்புடன் அந்த அணி களமிறங்குகிறது. ஜூலை மாதம் சொந்த மண்ணில் நடந்த ஆசிய கோப்பை பைனலில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதால், இலங்கை அணி சற்று நம்பிக்கையுடன் உள்ளது.

அதே சமயம், அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி உறுதியுடன் உள்ளதால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணிகளும் 23 டி20ல் மோதியுள்ளதில் இந்தியா 18-5 என முன்னிலை வகிக்கிறது. கடைசியாக மோதிய 5 போட்டியிலும் இந்தியா 3-2 என முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News