ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடர் : வெஸ்ட் இண்டீசை எளிதாக வீழ்த்தி தென் ஆப்ரிக்கா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி !!

Update: 2024-10-05 06:30 GMT

தென் ஆப்ரிக்கா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீசை எளிதாக வீழ்த்தி தென் ஆப்ரிக்கா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ரன் குவிக்க முடியாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன் மட்டுமே எடுத்தது. ஸ்டெபானி டெய்லர் அதிகபட்சமாக 44 ரன் எடுத்தார். ஷெமெய்ன் கேம்பெல் 17, ஜைதா ஜேம்ஸ் 15, தியாந்த்ரா டோட்டின் 13 ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்கா பந்துவீச்சில் நான்குலுலெகோ எம்லபா 4 விக்கெட், மரிஸன்னே காப் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, கேப்டன் லாரா வுல்வார்ட் – டஸ்மின் பிரிட்ஸ் தொடக்க ஜோடியின் அபார ஆட்டத்தால் 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 119 ரன் எடுத்து எளிதாக வென்றது. வுல்வார்ட் 59 ரன் (55 பந்து, 7 பவுண்டரி), பிரிட்ஸ் 57 ரன்னுடன் (52 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். எம்லபா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். தென் ஆப்ரிக்கா 2 புள்ளிகள் பெற்றது.

Tags:    

Similar News