ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா இலங்கை !!

Update: 2024-09-24 05:30 GMT

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் வங்கதேசத்துடன் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 12 புள்ளிகளை பெற்றதுடன் வெற்றி விகிதத்தை 71.67% ஆக அதிகரித்துள்ளது.

இதனால் இந்திய அணி அடுத்த ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா 62.50% உடன் 2வது இடத்தில் உள்ள நிலையில், காலே மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இலங்கை அணி (50.00%) 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

Advertisement

2023-25 டெஸ்ட் சீசன் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். பாகிஸ்தானை 2-0 என ஒயிட்வாஷ் செய்ததால் 4வது இடத்துக்கு முன்னேறிய வங்கதேசம், சென்னை டெஸ்டில் அடைந்த படுதோல்வியால் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.



 


Tags:    

Similar News