இந்தியா –நியூசிலாந்து அணியின் மோதல் மழையின் காரணமாக ரத்து - இன்று நடக்குமா ??

Update: 2024-10-17 06:20 GMT

இந்தியா –நியூசிலாந்து அணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெங்களூரு, எம்.சின்னசாமி ஸ்டேடியதில் இந்தியா –நியூசிலாந்து அணிகளிடையே நேற்று தொடங்க இருந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம், கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது.

இந்த டெஸ்ட் நான்கு நாள் அல்லது அதற்கும் குறைவாகவே நடைபெறும் வாய்ப்பு இருப்பதால், போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் நடைபெறும் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஃபாலோ ஆன் கொடுக்க 200 ரன் முன்னிலை தேவை என்ற நிலையில், இப்போட்டிக்கு 150 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 4 நாளும் காலையில் 15 நிமிடம் முன்னதாக தொடங்கும் ஆட்டம், மாலையில் 15 நிமிடம் கூடுதலாக நடக்கும். இதன் மூலமாக ஒவ்வொரு நாளும் 98 ஓவர்கள் வீசும் வாய்ப்பு கிடைக்கும்.

பெங்களூரு மைதானத்தில் நிமிடத்துக்கு பத்தாயிரம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் வகையிலான அதிநவீன ‘சப்-ஏர்’ வடிகால் வசதி இருந்தும், நேற்று பிற்பகலில் பெய்த கனமழையால் ஆட்டம் ரத்து ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஹாவ்க்-ஐ’ தொழில்நுட்பத்துக்கு தேவையான 10 கேமராக்களை நிறுவுவதிலும் சிக்கல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்னையும் சரி செய்யப்பட்டு 2வது நாளான இன்று போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News