சேப்பாக்கத்தில் மைதானத்தில் சதம் நொறுக்கிய இந்திய வீரர் அஸ்வின் !!

Update: 2024-09-20 05:42 GMT

இந்திய வீரர் அஸ்வின்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேப்பாக்கத்தில் மைதானத்தில் சதம் நொறுக்கிய இந்திய வீரர் அஸ்வினுக்கு சென்னை மைதானத்தில் இது 2-வது சதமாகும். ஏற்கனவே 2021-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக இங்கு 106 ரன்கள் எடுத்திருந்தார். இதையும் சேர்த்து இங்கு தனது 5-வது டெஸ்டில் ஆடும் அஸ்வின் இன்னிங்சில் 4 முறை 5 விக்கெட் சாய்த்துள்ளார்.இதன் மூலம் ஒரு மைதானத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சதத்துடன், பலமுறை இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அறுவடை செய்த 5-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.

சென்னையைச் சேர்ந்த அஸ்வின் அளித்த பேட்டியில், 'சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது தான். இங்கு முழுமையான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறேன். இது எனக்கு நிறைய அற்புதமான நினைவுகளை கொடுக்கிறது.


இன்றைய டெஸ்டுக்குரிய ஆடுகளம், பழைய சேப்பாக்கம் ஆடுகளம் போன்று உள்ளது. கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும். பந்து வீச்சாளர்கள் ஸ்டம்புக்கு வெளியில் வீசும் போது அடித்து ஆடலாம். ஒரு கட்டத்தில் வியர்த்து கொட்டி களைத்து போன போது அதை கவனித்த ஜடேஜா அந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்.

இனி 2 ரன்களை 3 ரன்களாக ஓடி எடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று கூறினார். அவரது யோசனை மீண்டு வர உதவிகரமாக இருந்தது' என்றார். மேலும் அவர், 'புதிய பந்து ஓரளவு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். நாளைய தினம் (இன்று) புத்துணர்ச்சியோடு போட்டியை தொடங்குவோம். ஆடுகளத்தில் இன்னும் ஈரப்பதம் உள்ளது. அது சீக்கிரம் காய்ந்து விடும் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News