10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய அயர்லாந்து !!

Update: 2024-09-30 08:00 GMT

அயர்லாந்து

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென் ஆப்பிரிக்கா- அயர்லாந்து அணிகள் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்து அயர்லாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோஸ் சதம் விளாசினார்.

இதனையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவை முதல் முறையாக வீழ்த்தி அயர்லாந்து அணி சரித்திர சாதனையை படைத்துள்ளது.

Tags:    

Similar News