யோகா போட்டியில் குமாரபாளையம் மாணவர்கள் சாதனை
தேசிய அளவிலான யோகா போட்டியில் குமாரபாளையம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.;
By : King 24x7 Website
Update: 2023-12-06 17:39 GMT
தேசிய அளவிலான யோகா போட்டியில் குமாரபாளையம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள் தேசீய கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா கலந்து கொண்டனர் இதில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, டெல்லி ஆகிய 7 மாநில அணிகள் போட்டியிட்டன. தமிழகம் சார்பில் பங்கேற்ற 50 மாணவ, மாணவியர்களில், குமாரபாளையம் யோகா அரவிந்த் பயிற்சி மைய மாணவ, மாணவியர், பயிற்சியாளர் மதுமிதா தலைமையில் 25 பேர் பங்கேற்றனர். இதில் 13 தங்கப்பதக்கம், 12 வெள்ளிப்பதக்கம், 10 வெண்கல பதக்கங்கள் வென்று, சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மகளிர் பிரிவில் இனியாஹர்ஷினி சாம்பியன்ஷிப் வென்று, தமிழக அணிக்கு பெருமை சேர்த்துள்ளார். தலைமை பயிற்சியாளர் அரவிந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சாதனை மாணவ, மாணவியரை பாராட்டினர்.