பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை இந்திய காலிறுதிக்கு தகுதி !

Update: 2024-07-26 09:40 GMT

வில்வித்தை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தைஆரம்பகட்ட போட்டிகளில் குறிவைத்து தாக்கிய இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணியனர் சிறப்பான ஆட்டத்தால் ஒலிம்பிக்கின் ஆரம்பமே அமர்க்களமாக அமைந்துள்ளது.

பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று தொடங்கியுள்ளது. இதில் மகளிர் தனிநபர் ரேங்கிங் சுற்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற அங்கிதா பகத் 11, பஜன் கவுர் 22 மற்றும் தீபிகா குமாரி 23-வது இடத்தை பிடித்தனர். புள்ளிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக இந்திய மகளிர் அணி நான்காம் இடம் பிடித்து காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஆண்களுக்கான தரவரிசை சுற்றில், தீரஜ் பொம்மதேவரா, ஒற்றையர் தகுதிச் சுற்றில் நான்காவது இடத்தை பிடித்தார். பொம்மதேவரா 335 புள்ளிகளுடன் முதல் பாதியின் முடிவில் 24வது இடத்தைப் பிடித்தார். அவர் 9Xகள், பதினைந்து 10 விநாடிகள் அடித்து 681 புள்ளிகளுடன் ரேங்கிங் சுற்றில் முடித்தார். தென் கொரியாவின் கிம் வூஜினை விட ஐந்து புள்ளிகள் பின்தங்கி இருந்தார்.

Tags:    

Similar News