பாரீஸ் ஒலிம்பிக்ஸ் -இந்திய வீரர்கள் இன்று பங்கேற்கும் போட்டிகளின் விவரம் !!
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய நிலையில் இந்த போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் இன்று பங்கேற்கும் போட்டிகளின் விவரம் குறித்து இந்திய நேரப்படி பாப்போம்.
*துப்பாக்கி சுடுதல்:- ரைஜா தில்லான், மகேஸ்வரி சவுகான் (பெண்களுக்கான ஸ்கீட் தகுதி சுற்று), பகல் 12 30 மணி, மனு பாக்கர் (பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப்போட்டி), பகல் 1 மணி.
*வில்வித்தை:- தீபிகா குமாரி (இந்தியா)- மிச்செல் கிரோப்பன் (ஜெர்மனி), பகல் 1.52 மணி, பஜன் கவுர் (இந்தியா)- தியானந்தா கோருனிசா (இந்தோனேசியா), (பெண்கள் தனிநபர் 3-வது சுற்று), பிற்பகல் 2.05 மணி.
*பாய்மரப்படகு:- நேத்ரா குமணன் (பெண்கள் டிங்கி), மாலை 3.35 மணி, விஷ்ணு சரவணன் (ஆண்கள் டிங்கி), மாலை 3.50 மணி.
*குத்துச்சண்டை:- நிஷாந்த் தேவ் (இந்தியா)- மார்கோ வெர்டே (மெக்சிகோ), (ஆண்கள் 71 கிலோ எடைபிரிவு கால்இறுதி ஆட்டம்), நள்ளிரவு 12.18 மணி.