ஃபைனலுக்கு முன்னேறிய ஆர்சிபி!

Update: 2024-03-16 10:07 GMT

ஆர்சிபி

WPL 2024 : இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கடந்தாண்டு மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி பட்டம் வென்றது. இந்நிலையில் மும்பை, பெங்களூரு, டெல்லி,உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 5 அணிகள் மோதிய இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மேலும் பெங்களூரு -டெல்லி அணிகள் மோதும் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

Tags:    

Similar News