டி20 உலகக் கோப்பை - மழையால் போட்டி பாதிப்பு அடைந்த நிலையில் 28 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி !!

Update: 2024-06-21 09:40 GMT

ஆஸ்திரேலியா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர் டன்சித் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 16 ரன் களில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய தவ்ஹித் ரிடோய் 40 ரன்களை எடுத்தார். இவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 140 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாயினிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இதனிடையே 11.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது.

தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆஸ்திரேலியா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா சார்பில் டேவிட் வார்னர் 53 ரன்களுடனும், கிளென் மேக்ஸ்வெல் 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் சார்பில் ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags:    

Similar News