யூரோ கோப்பை கால்பந்து லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - சுவிட்சர்லாந்து இடையிலான போட்டி ட்ரா ஆனது........

Update: 2024-06-20 10:40 GMT

 கால்பந்து

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஜெர்மனியில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. முன்னதாக ஹங்கேரி அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற அபார வெற்றியை பெற்ற சுவிட்சர்லாந்து, இந்த போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் ஆடியது.

மறுபுறம் ஸ்காட்லாந்து அணியும் வெற்றி முனைப்பில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அந்த வகையில் ஸ்காட் மெக்டொமினே அடித்த கோல் காரணமாக ஸ்காட்லாந்து அணி போட்டியில் முன்னணி வகித்தது.

இதைத் தொடர்ந்து பதில் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டிய சுவிட்சர்லாந்து அணிக்கு ஷகிரி 20 யார்ட்களில் இருந்து அடித்த ஷாட் கோலாக மாறியது. இதனால் போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில இருந்தன.

இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் இன்னொரு கோல் அடித்து முன்னிலை பெற முனைப்பு காட்டினர். எனினும், போட்டி முடிவில் 1-1 என்ற வகையில் போட்டி சமனில் முடிந்தது.

Tags:    

Similar News