இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் தொடரில் இந்திய அணி படுதோல்வி !

Update: 2024-08-08 13:30 GMT

ரோகித் சர்மா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் தொடரில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.

1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி முதல் முறையாக இலங்கை அணி ஒரு நாள் தொடரை இழந்து இருக்கிறது. இதனால் இலங்கை ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் அணியை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்தியனியை பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா மட்டும் பேட்டிங்கில் நன்றாக விளையாடினார். மற்ற எதிலும் இந்திய அணி சுமாராக கூட விளையாடவில்லை.

Advertisement

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோகித் சர்மா, இந்த தொடரில் சில பாசிட்டிவ் விஷயங்களும் இந்திய அணிக்கு நடந்திருக்கிறது. எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்கள்.சில பேட்ஸ்மேன்களும் நன்றாக விளையாடி இருக்கிறார்கள். 

இலங்கைக்கு எதிரான தொடரை இழந்ததால் எங்களுடைய உலகம் ஒன்றும் முடிவுக்கு வந்து விடாது. நாங்கள் ஒரு அணியாக கடந்த சில ஆண்டுகளாகவே நன்றாக விளையாடி வந்து கொண்டிருக்கின்றோம். இதுபோன்ற சில தொடர்களை தோற்கும் நிலையும் வரலாம் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Tags:    

Similar News