டோரே பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் - இங்கிலாந்து வீராங்கனை தகுதி !!
Update: 2024-10-26 08:40 GMT
டோக்கியோ: டோரே பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இங்கிலாந்து வீராங்கனை கேத்தி போல்ட்டர் தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவுடன் (24 வயது, 159வது ரேங்க்) நேற்று மோதிய போல்ட்டர் (28 வயது, 33வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றி பெற்றார். இப்போட்டி 1 மணி, 2 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ரஷ்யாவின் டயானா ஷ்னெய்டருடன் (20 வயது, 16வது ரேங்க்) மோதவிருந்த ஜப்பான் வீராங்கனை சயாகா இஷி (19 வயது, 279வது ரேங்க்) காயம் காரணமாக விலகியதை அடுத்து, டயானா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் கெனின் – போல்ட்டர், கின்வென் – டயானா மோதுகின்றனர்.