மல்யுத்தத்துக்கு குட் பை அறிவிப்பை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீராங்கனை வினேஷ் போகத் !!
ஒலிம்பிக் தொடரின் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை வினேஷ் போகத் படைத்திருந்தார்.இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100கிராம் கூடியதால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இந்த நிலையில் இன்று அதிகாலை வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மல்யுத்தம் என்னை வீழ்த்திவிட்டது.என்னை மன்னிக்கவும்.. எனது கனவுகள் சிதைந்துவிட்டன. என் மனதைரியமும், நம்பிக்கையும் உடைந்துவிட்டன. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 - 2024 மல்யுத்தத்துக்கு குட் பை” என்று வினேஷ் போகத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.