இம்பேக்ட் விதி ரத்து செய்ய கோரி பிசிசிஐக்கு கடிதம் எழுதிய விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா !!
ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக்ட் விதிக்கு விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஐபிஎல்லில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்த விதி அமல்படுத்தப்பட்டது.
இந்த விதியை பொறுத்தவரை போட்டி தொடங்கிய பின்னர், இன்னிங்சில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஒரு வீரரை நீக்கிவிட்டு அவருக்கு பதில் வேறு வீரரை பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணத்திற்கு சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தால், சிவம் துபேவை ஒரு பேட்ஸ்மேனாக பயன்படுத்திவிட்டு, பின் பந்துவீச்சின்போது அவருக்கு பதில் வேறு ஒரு பந்துவீச்சாளரை தேர்வு செய்யலாம். இதனால் ஒவ்வொரு அணியும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துவிடுவதால் அந்த அணி எளிதாக 200 ரன்களுக்கு மேல் அடித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த விதியை நீக்க வேண்டும் என பல அணி நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பிசிசிஐக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அதில் இம்பேக்ட் விதி மூலம் இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய நல்ல ஆல்ரவுண்டர்கள் கிடைக்காமல் போக அதிக வாய்ப்பு இருப்பதாக ரோகித் குற்றம் சாட்டி உள்ளார்.
ஆல்ரவுண்டர்களின் முக்கியத்துவம் கருதி பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் ஐபிஎல் 2026ம் ஆண்டு சீசனில் இம்பேக்ட் விதி இருக்காது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.