பிளே-ஆப் சுற்றுக்கு csk- தகுதி பெறுமா ???

Update: 2024-05-17 09:05 GMT

csk

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னையில் தொடங்கியது 10 அணிகள் பங்கேற்றது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.

புள்ளி பட்டியலில் முதல் நாள் இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் இதுவரை 66 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல் அணி முன்னேறிய நிலையில் நேற்று ஹைதராபாத் குஜராத் அணிகள் மோத இருந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டு இதனால் ஹைதராபாத் மூன்றாவது ஆணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

பிளே ஆப் சுற்றுக்கு நாளாவது அணியாக தகுதி பெறப்போவது யார் என்பது நாளை தெரியும் பெங்களூருவில் நாளை நடக்கும் 68 வது ரிலீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன.

போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 14 புள்ளிகள் உடன் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் சென்னை அணி தகுதி பெற்று விடும். ஒருவேளை தோற்கும் பட்சத்தில் அது மோசமான தோல்வியாக இருக்கக் கூடாது. இது போன்ற சூழ்நிலையை தவிர்க்க வெற்றி பெற வேண்டியது சென்னை அணிக்கு கட்டாயமாகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பலமாக இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட், டேரில் மிட்செல், ஷிவம் துபே ஆகியோர் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஜடேஜா நல்ல நிலையில் உள்ளார். கடைசி கட்டத்தில் டோனி அதிரடியாக விளையாடுகிறார்.

சென்னை அணியின் பந்து வீச்சு முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். பதிரனா, முஸ்தாபிசுர் ரகுமான் ஆகியோர் இல்லாதது பாதிப்பை காட்டுகிறது. எனவே பந்து வீச்சில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது முக்கியம்.

Tags:    

Similar News