பிளே ஆப் சுற்றுக்குள் முன்னேறுமா RCB !-இன்று RCB (VS) CSK மோதல் !!!
ப்ளே ஆப் சுட்டுக்கான 4 அணியாக நுழையப்போவது யார் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இடையே நீயா நானா என போட்டி ஏற்பட்டுள்ளது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்த போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும் ஆனால் பெங்களூர் அணி சென்னை அணியை விட குறைவான ரன் ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18 புள்ளி ஒரு ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றாலும் 4 இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் குறைந்த பட்சம் 18 ரன் வித்தியாசத்திலும் இரண்டாவது பேட்டிங் செய்தால் 200 இலக்கை 11 பந்துக்கள் மீதம் வைத்தும் வெற்றி பெற வேண்டும்.
இதற்கு இடையே பெங்களூருவில் நடைபெற உள்ள ஆர்சிபி -சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதன்படி ஐந்து ஓவர்கள் வரை கொண்ட ஆட்டத்தில் ஆர்சிபி அணி முதலில் களம் இறங்கினால் 5 ஓவர்கள் 75 ரன்கள் அடித்து சிஎஸ்கேவை 57 ரன்களில் முறியடிக்க வேண்டும். ஒருவேளை சேசிங் சென்றால் சிஎஸ்கே 5 ஓவரில் 75 ரன்கள் அடித்தால் ஆர்சிபி அணி மூன்று புள்ளி ஒரு ஓவரில் இலக்கை சேஸ் செய்யப்படும் இது நடந்தால் மட்டுமே ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.