மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா !!

Update: 2024-10-14 07:30 GMT

மகளிர் டி20 உலகக் கோப்பை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகின்ற நிலையில் நேற்று நடைபெற்ற 18-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் பலபரீட்சை நடத்தியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்ததையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடியது. கடைசி வரை போராடிய இந்திய அணி வெற்றி பாதையை அடைய முடியவில்லை.

இறுதியில் இந்திய அணி 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 9 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி, மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15-வது முறை வெற்றி பெற்று அசத்தி உள்ளது. தொடர்ந்து ஒன்பதாவது முறையாக அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது.

Tags:    

Similar News