மகளிர் டி20 உலகக்கோப்பை - தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் !!

Update: 2024-10-21 05:30 GMT

மகளிர் டி20 உலகக்கோப்பை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் பெற்றது. மகளிர் டி20 உலககோப்பை சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக நியூசிலாந்து மகளிர் அணி பெற்று அசத்தியுள்ளது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்கள் குவித்த நிலையில் 159 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை கண்டது.

தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் லாரா வால்வார்ட் 27 பந்துகளில் 33 ஓட்டங்கள் குவித்து சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தார். ஆனால் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 126 ஓட்டங்களை பெற்ற நிலையில், தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை அமெலியா கெர் மற்றும் ரோஸ்மேரி மெய்ர் தலா 3 விக்கெட்டுகளை பறித்து அசத்தினர். இதன்படி நியூசிலாந்து மகளிர் அணி முதல்முறையாக உலக கிண்ணம் ஒன்றை கைப்பற்றியுள்ளது.

Tags:    

Similar News