தைப்பூச திருநாளன்று பழநி முருகன் கோயிலில் பஞ்சாமிர்த தட்டுப்பாடு ! | பதர்கள் அவதி | கிங் நியூஸ் 24x7

Update: 2025-02-13 06:54 GMT

பழனி பஞ்சமிர்தம் 

தைப்பூச திருவிழா சமயத்தில் பழநியில் பஞ்சாமிர்த பிரசாதமும் மற்ற கோயில்களில் நெய்வேத்திய பிரசாதமும் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள இந்து முன்னணி, பக்தர்களை சிரமத்துக்கு உள்ளாக்கிய இந்து சமய அறநிலைத் துறையும் தமிழக அரசும் முருக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநில மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா தைப்பூசம். இத்திருவிருவிழாவுக்கு இந்துக்கள் நேர்த்திக் கடன் செலுத்த விரதமிருந்து, வேல்குத்தி, காவடி சுமந்து பாதயாத்திரையாக நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

பக்தர்களை சிரமத்துக்கு உள்ளாக்கிய இந்து சமய அறநிலையத் துறையும் தமிழக அரசும் முருக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நேராமல் இருக்கவும், கோயிலையும் பக்தர்களையும் பாதுகாக்கவும் சுதந்திர வாரியம் அமைப்பதே தீர்வாக அமையும். எனவே அறநிலையத் துறை ஆலயத்தைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News