தங்க கவச அலங்காரத்தில் ஜொலித்த பழையபாளையம் ஸ்ரீ அங்காளம்மன்!
தை அமாவாசையை முன்னிட்டு அங்காளம்மனுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது;
By : Namakkal King 24x7
Update: 2025-01-29 06:39 GMT
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஏரிக்கரையில், சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது.நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் இக்கோயிலுக்கு தினசரி வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.