தை அமாவாசை ஸ்ரீ துலுக்கானத்தம்மன் ஆலயத்தில் முதலாமாண்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சேத்பட் சாலை கண்ணகி தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ துலுக்கானத்தம்மன் ஆலயத்தில் முதலாமாண்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது;
By : Arani King 24x7
Update: 2025-01-29 07:05 GMT
ஆரணி டவுன் சேத்பட் சாலை கண்ணகி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ துலுக்கானத்தம்மன் ஆலயத்தில் முதலாமாண்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீ துலுக்கானத்தம்மன் ஆலயம் பக்தர்களின் பெரு முயற்சியால் அழகுற ஆலய கோபுரம், மண்டபம் எழுப்பி, ஸ்ரீ வரசித்தி வினாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், நவகிரக ஆலயங்கள் அமைத்து மஹா கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் நேற்று தை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரித்து முதலாமாண்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் இதில் ஸ்ரீ துலுக்கானத்தம்மன்ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்தார். மேலும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து பெண்கள் மற்றும் பக்தர்கள் என திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.