பேருந்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள்
பேருந்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.;
படியில் பயணம் செய்யும் மாணவர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திற்கு பல்வேறு வணிக நிறுவனங்கள் பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலூர் பண்ருட்டி திருவெண்ணெய் நல்லூர் சித்தலிங்கமடம் வழியாக வருவது வழக்கம் இன்று காலை 8.30 மணி அளவில் கடலூரில் இருந்து திருக்கோயிலூர் நோக்கி மகாலட்சுமி என்ற தனியார் பேருந்து விதிகளை மீறி அதிகளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் அதிகளவு தொங்கியபடி வரும்பொழுது சாலையின் ஓரமாக நடந்து செல்லும் நபர்கள் மீது இடித்து தள்ளிக்கொண்டு எட்டி உதைப்பது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது சுயலாபத்திற்காக இளைஞர்களின் உயிர்களை பறி கொடுக்கத் துடிக்கும் இது போன்ற தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.