அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-11-25 05:01 GMT

மாவட்ட செயலாளர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 27-ந்தேதி தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்.

தமிழ்ச்சமுதாயம் தலைமை நிமிர, தமிழ் இனம், மொழி என்கிற உணர்வு பெற உழைத்து பெரியார், அண்ணா, கருணாநிதி, ஆகியோர் கொள்கை, லட்சியங்களை உள்ளத்தில் ஏந்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் ஓய்வின்றி பணியாற்றி வரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா, தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு விளக்க பிரசாரம் ஆகியவற்றுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

Advertisement

அதே போன்று மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்க வேண்டும். விளையாட்டு போட்டிகளை நடத்தி, தி.மு.க. கொடியேற்றி இனிப்புகள் வழங்கி, மாவட்டத்தில் உள்ள பகுதி, ஒன்றிய, பேரூர் கட்சி நிர்வாகிகள், இளைஞர் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் ஈடுபட வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகள் தோறும், மாநகரத்தில் உள்ள வட்டங்கள் தோறும், பேரூரில் உள்ள வார்டுகள் தோறும் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News