தீவட்டிப்பட்டி பகுதிகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தீவட்டிப்பட்டி பகுதிகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு

Update: 2023-11-25 06:21 GMT

கோப்பு படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் அதிகாரிகள் நேற்று முத்துநாயக்கன்பட்டி, பூமிநாயக்கன்பட்டி, ஓமலூர், தீவட்டிப்பட்டி, பன்னப்பட்டி, பாகல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அதாவது, பனை மரம் ஏறுதல் மற்றும் அதுதொடர்பாக தொழில்களில் கொத்தடிமை தொழிலாளர்கள் யாராவது ஈடுபட்டுள்ளார்களா? என ஆய்வு நடத்தினர். அப்போது பனை மரம் ஏறும் தொழில்களில் கொத்தடிமை தொழிலாளர்களாக எவரும் பணியமர்த்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது குற்றமாகும். இதை மீறி தொழிலாளர்களை கொத்தடிமை தொழிலாளர்களாக பணியமர்த்தும் உரிமையாளர்கள் மீது கோர்ட்டு மூலம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும் என்று உதவி ஆணையர் கிருஷ்ணவேணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News