மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்
மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-25 09:32 GMT
சான்றிதழ் வழங்கல்
திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது.தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். பள்ளி ஆய்வாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.
தாசில்தார் மாரியாபிள்ளை 2,500 மாணவியர்களுக்கு ஜாதி, இருப்பிட சான்றிதழ்களை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வினோபா, பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளர் ஜானகிராமன், உதவி தலைமை ஆசிரியர்கள் பாஸ்கரன், உஷாராணி பங்கேற்றனர்.