மண்சோறு சாப்பிட்டு வழிபாடு செய்த தேமுதிகவினர்

விஜயகாந்த் நலம் பெற வேண்டி மண்சோறு சாப்பிட்டு தேமுதிகவினர் வழிபாடு

Update: 2023-12-03 09:42 GMT

வழிபாடு நடத்திய தேமுதிகவினர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மூச்சு திணறல் காரணமாக, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜயகாந்த், விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்தவகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தேமுதிகவின் மேற்கு ஒன்றியம் சார்பில் திருப்பாலப்பந்தல் மத்திய நாதேஸ்வரர் சன்னதியில் கோயிலில் தேமுதிக தொண்டர்கள் இன்று கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி, திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.காமராஜ் தலைமையில் திருப்பாலப்பந்தல் மத்திய நாதேஸ்வரர் கோயிலில் கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டு 200க்கும் மேற்பட்டோர் மண் சோறு சாப்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய கழக துணைச் செயலாளர் மின்னல் S.மணிகண்டன் செய்திருந்தார்.நடிகர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என தேமுதிகவினர் பல்வேறு கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் என அவருக்காக சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News