வி.ஏ.ஓ.,வை பணியிட மாற்றம் செய்ய மனு

வி.ஏ.ஓ.,வை பணியிட மாற்றம் செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-12-05 08:46 GMT

மனு அளித்த மக்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் வி.ஏ.ஓ.,வை பணிடமாற்றம் செய்யக்கோரி கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து, உளுந்துார்பேட்டை அடுத்த சிக்காடு மற்றும் கல்சிறுநாகலுார் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் அளித்த புகார் மனு: உளுந்துார்பேட்டை அடுத்த சிக்காடு மற்றும் கல்சிறுநாகலுார் கிராமத்தில் 2,000 குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

கிராமத்தில் பணிபுரியும் வி.ஏ.ஓ., கிராம மக்களிடம் பட்டா மாற்றம், அடிப்படை தேவையான வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களுக்கு கையெழுத்து போட லஞ்சம் கேட்கிறார் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News