சேலம் சீலநாயக்கன்பட்டியில் நிதி நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு
Update: 2023-12-11 07:15 GMT
சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் உத்தமராஜா (30). தனியார் நிதி நிறுவன ஊழியர். சம்பவத்தன்று உத்தமராஜா வேலை சம்பந்தமாக சீலநாயக்கன்பட்டிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த சிலர் உத்தமராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் இருந்து ரூ.80 ஆயிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அவர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்