இலங்கையிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட ராமர் பாதம்!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக இலங்கையிலிருந்து விமானம் மூலம் ராமர் பாதம் கொண்டு வரப்பட்டது.;

Update: 2023-12-16 16:25 GMT

ராமர் பாதம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வருகிறது ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியிலுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்காக இலங்கையிலிருந்து ஆறு பேர் கொண்ட குழுவினர் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக இலங்கையில் இருந்து பூஜிக்கப்பட்ட ராமர் பாதங்களை மதுரை விமான நிலையம் கொண்டு வந்தனர். பாஜக, விஷ்வ இந்து பரிசீத், இந்து முன்னணி அமைப்பினர் கும்பம் மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ராமர் பாதம் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் ராம ராஜ் யுவா யாத்திரையின் மூலம் இந்த ராமர் பாதம் நாளை ராமேஸ்வரத்தில் துவங்கி எட்டு மாநிலங்கள் வழியாக அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது கொண்டு சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News