நரிக்குறவர் பெண்ணுக்கு சிகிச்சை: அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு
Treatment of fox woman: Kudos to government doctors;
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே துவரமடையில் உள்ள நரிக்குறவர்கள் காலனியை சேர்ந்தவர் மாரி. இவரது மனைவி விஜயா (60), கடந்த சில மாதங்களாக விஜயா குடல் இறக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டார்.
கடந்த வாரம் விஜயாவுக்கு வயிற்று வலி அதிகமானதால், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனை தலைமை மருத்துவரான அன்பழகன், மருத்துவர்கள் பரத், கோமதி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர், விஜயாவை பரிசோதனை செய்ததில், குடல் இறக்கத்துடன், அவரது அடி வயிற்றில் கட்டி ஒன்று இருப்பதை கண்டறிந்தனர்.
பின்னர், விஜயாவுக்கு அறுவை சிகிச்சை செய்து, சுமார் 15 செ.மீ., சுற்றளவு கொண்ட ஒரு கிலோ எடையிலான கட்டியை மருத்துவர்கள் அகற்றினர். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த விஜயா, தனக்கு அறுவை சிகிச்சை செய்து தனது உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து, அவர்கள் நலமுடன் வாழ வேண்டும் என வாழ்த்திய சம்பவம், அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்பட