மாமன்ற உறுப்பினர்களுக்கான பயிலரங்கம்: மேயர் தொடங்கி வைப்பு
சென்னை மாமன்ற உறுப்பினர்களுக்கான பயிலரங்கத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-12 09:55 GMT
பயிலரங்கத்தை தொடங்கி வைத்த மேயர்
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பள்ளிக் கல்வித்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மாமன்ற உறுப்பினர்களுக்கான பள்ளி மேலாண்மைக் குழு குறித்த பயிலரங்கத்தினை ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்து, பள்ளி மேலாண்மை குழு பயிற்சி கையேட்டினை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், துணை ஆணையாளர் ஷரண்யா அறி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.