கவர்னரிடம் விருது பெற்ற ஆட்சியருக்கு பலர் வாழ்த்து
அதிக வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து, மாநில அளவில் முதலிடம் பிடித்தமாவட்ட ஆட்சியருக்கு, தேர்தல் ஆணையம் சார்பில் ஆளுநர் விருது வழங்கி பாராட்டு அளிக்கப்பட்டது.;
அதிக வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து, மாநில அளவில் முதலிடம் பிடித்தமாவட்ட ஆட்சியருக்கு, தேர்தல் ஆணையம் சார்பில் ஆளுநர் விருது வழங்கி பாராட்டு அளிக்கப்பட்டது.
அதிக இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து, மாநில அளவில் முதலிடம் பிடித்ததற்காக, மாவட்ட ஆட்சியருக்கு, தேர்தல் ஆணையம் சார்பில் ஆளுநர் விருது வழங்கி பாராட்டு, அரசுத்துறை அலுவலர்கள் வாழ்த்து.... தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில்அதிக இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்ததில் மாநில அளவில் முதலிடம் பிடித்ததற்காக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கற்பகத்திற்க்கும், மேலும், கொடி நாள் வசூலில், மாநிலத்தில், பெரம்பலும் மாவட்டம், 3வது இடம் பெற்றுள்ளது, இதற்காக உதவி தேர்தல் நடத்தும்
அலுவலர் மற்றும் பெரம்பலூர் சார் ஆட்சியருமான கோகுல் -க்கும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாவட்ட ஆட்சியர் கற்பகம் மற்றும் சார் ஆட்சியர் கோகுல் ஆகியோருக்கு விருது வழங்கிய பாராட்டினார். இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் கற்பகத்திற்கு ஜனவரி 26ம் தேதி அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர். மேலும் சார் ஆட்சியர் கோகுல் -லுக்கும் அரசு துறை அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .