சென்னை மெட்ரோ ரயில் சேவை அட்டவணை மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் சேவை அட்டவணை இன்று ஒருநாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Update: 2024-02-18 14:19 GMT

கோப்பு படம் 

தெற்கு ரயில்வேயில் சென்ட்ரல் மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று மெட்ரோ ரயில்களில் அதிக பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் வழக்கமாக காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும், வழக்கமாக மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் 7 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும் மேலும், காலை 05:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 08:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும், வழக்கமான ஞாயிறு அட்டவணையின்படி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் மேற்கண்ட அட்டவணை மாற்றம் இன்று (18-02-2024)‌ மட்டுமே பொருந்தும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News