பெண்கள் உடற்பயிற்சி கூடம்: அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைப்பு
கோடம்பாக்கம் மண்டலத்தில் பெண்கள் உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-11 11:44 GMT
உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த அமைச்சர்
கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-140 உட்பட்ட கோடம்பாக்கம் சாலையில் மாமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.35 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பெண்கள் உடற்பயிற்சி கூடத்தினை அமைச்சர் மா. சுப்ரமணியன் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா, துணை மேயர் மகேஷ்குமார், மண்டலக்குழுத் தலைவர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, நொளம்பூர் ராஜன், மாமன்ற உறுப்பினர்கள் எம். ஸ்ரீதரன், பெ. மணிமாறன், சுப்பிரமணி,மண்டல அலுவலர் பா.முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.