இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க அந்த சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவு.
அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது;
By : King 24X7 News (B)
Update: 2024-03-14 14:32 GMT
சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற உரிமையில்லை என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.
அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.