பீகார் மாநில மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி
பீகார் மாநிலத்தில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்புத் திட்டங்கள் சார்ந்து அறிந்து கொள்ளும் விதமாக ஐந்து நாள் உண்டு உறைவிட பயிற்சி ஐந்து கட்டங்களாக ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்புத் திட்டங்கள் சார்ந்து அறிந்து கொள்ளும் விதமாக ஐந்து நாள் உண்டு உறைவிட பயிற்சி ஐந்து கட்டங்களாக ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சியின் முதற்கட்டமாக 50 அலுவலர்களும், இரண்டாம் கட்டமாக 40 அலுவலர்களும், மற்றும் மூன்றாம் கட்டமாக இன்று 27 அலுவலர்கள் பயிற்சியில் கலந்துக் கொண்டனர். மேலும் 100 அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் சுமார் 250 கல்வி அலுவலர்கள் பயன்பெறுகிறார்கள். இப்பயிற்சியின் மூலம் பீகார் மாநிலத்தில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்ந்து இயங்கி வரும் அனைத்து நிலை பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் பற்றிய அறிமுகமும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெடுப்புகளான புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் தகைசால் பள்ளிகள், உயர்தொழில் நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகளை ஏற்படுத்துதல் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பயிற்சிகள் சிறப்புத் திட்டங்கள் சார்ந்த விரிவான விளக்கங்களை பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் முனைவர் க.அறிவொளி இணை இயக்குநர் முனைவர். வை.குமார், சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர். ஷமீம், மாவட்டக் கல்வி அலுவலர் முனைவர் அ.நளினி ஆகியோர் கலந்துகொண்டு தமிழக அரசின் சிறப்பு திட்டங்களைக் குறித்து கலந்துரையாடினர்.