மணலி புது நகரில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து

மணலி புதுநகர் விச்சூர் பகுதியில் பெயின்ட் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தை மூன்று மணி நேரத்திற்கு மேலாகியும் தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர்.

Update: 2024-06-16 15:11 GMT

புகைமண்டலம் 

மணலி புது நகர் விச்சூரில் இயங்கிவரும் ரூபி பெயின்ட் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்து தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுனர். இன்று விடுமுறை தினம் என்பதால் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

தொழிற்சாலையின் உரிமையாளர் பெரம்பூர் பெரியார் நகரில் பகுதியில் வசித்து வரும் தனபால் இவர் மணலி புதுநகர் விச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிட்கோ வளாகத்தில் இயங்கி வரும் ரூபி பெயிண்ட் பிரைவேட் லிமிடெட் பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் மூலப் பொருட்கள் சேமிப்புக் கிடங்கு மற்றும் பெயிண்ட் தயார் செய்து விற்பனை விற்பனை செய்வதற்காக இந்த பகுதியில் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இன்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் திடீரென ஏற்பட்ட தீ வேகமாக பரவி தொழிற்சாலை முழுவதும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

இதனையடுத்து கரும்பு புகை வானுயர சென்ற நிலையில் இதனால் அருகே வசிப்பவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பெயிண்ட் தயாரிக்கும் மூலப் பொருள்கள் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெயிண்டுகள் எரிந்து சேதமானது.

சுமார் 17-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் சுமார் ஒரு கோடிக்கும் மேல் மதிப்பிலான பொருட்கள் சேதம் ஆகி உள்ளதாகவும் 3 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்னும் தீயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வர 5 மணி நேரம் ஆககூடும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News