நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு... அமித் ஷா வருகையால் உற்சாகம்..! நயினாரால் புத்துணர்வு பெறும் தமிழக பாஜக..!!

நயினார் நாகேந்திரன் தலைவரான பிறகு நடைபெறும் மாபெரும் பூத் கமிட்டி மாநாட்டால், தமிழக பாஜகவில் புதிய உத்வேகம் பிறந்துள்ளது.;

Update: 2025-08-21 04:57 GMT

Nainar Nagendran

தென் தமிழகமே குலுங்கும் வகையில், திருநெல்வேலியில் நாளை பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. பூத் கமிட்டி மாநாட்டிற்கு உள் துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளத்து. நயினார் நாகேந்திரன் தலைவரான பிறகு நடைபெறும் மாபெரும் பூத் கமிட்டி மாநாட்டால், தமிழக பாஜகவில் புதிய உத்வேகம் பிறந்துள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் முழு வேகத்தில் தயாராகி வருகின்றன. ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்டவை ஏற்கெனவே தேர்தல் பிரசாரங்களை தொடங்கிவிட்டன. அந்த வகையில் 3ஆவது பெரிய கட்சியான தமிழக பாரதிய ஜனதா கட்சியும், சட்டசபைத் தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக களமிறங்கி உள்ளது. தமிழக பாஜக, அதன் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு, உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. என்னதான் அதிமுகவுடன் கூட்டணி என்றாலும், தமிழ்நாட்டில் தனிப்பட்ட வளர்ச்சியை அக்கட்சி திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. அதற்காக பல்வேறு வியூகங்களை அமைத்து, நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார். அக்கட்சியின் தேசியத் தலைவர்களில் முக்கியமானவர்களான பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நாளை 22ஆம் தேதி, பாஜகவின் குமரி மண்டலத்தைச் சேர்ந்த பிரம்மாண்டமான பூத் கமிட்டி மாநாடு, நெல்லையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. முதலில் இந்த மாநாடு ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தமிழக பாஜகவின் முதுபெரும் தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசனும் உடல்நலக் குறைவால் காலமானதை அடுத்து, பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் ஒத்திவைக்கப்பட்ட பூத் முகவர்கள் மாநாடு, நாளை 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறும் நெல்லை பாஜக பூத் முகவர்கள் மாநாட்டில் அமித்ஷா பங்கேற்கிறார். வீரத்தின் விளைநிலமான நெல்லைச்சீமையில், திருச்செந்தூர் முருகனின் ஆசியோடு, கட்சி முகவர்களுக்கு பயிற்சி தர நயினார் நாகேந்திரன் பிரத்யேக ஏற்பாடுகளை செய்துள்ளார். இதில், தென் மாவட்டங்களில் நெல்லை உள்பட ஐந்து மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட, 28 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, 8,595 பூத் கமிட்டிகளைச் சேர்ந்த, சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற உள்ளனர். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக - அதிமுக அணி வெற்றி பெறுவது இலக்கு என்ற நோக்கத்துடன் பூத் கமிட்டி மாநாடு நடக்கிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில், திமுக அரசின் துஷ்பிரயோகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்; திமுக கூட்டணியின் வெற்றியை தடுத்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகளை பெற்று தருவது இலக்கு என்ற லட்சியத்துடன் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதுதவிர, மத்தியில் உள்ள பிரதமர் மோடியில் மக்கள் நலத் திட்டங்கள், தமிழகத்துக்கு அளித்த எண்ணற்ற நிதி உதவிகள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் வீடுவீடாக மக்களிடம் பூத் முகவர்கள் கொண்டு சேர்க்க வேண்டும். திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட வரிகள், நிறைவேற்றாத வாக்குறுதிகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, நயினார் நாகேந்திரன் வைத்துள்ளார். அதை செயல்படுத்தும் வகையில் மாநாட்டில் முகவர்களுக்கு பயிற்சி தரப்பட உள்ளது. ஒவ்வொரு பூத் அளவிலும் முழுமையாக, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு, தமிழகத்தில் நலனுக்காக தேச நலனுக்காக பணி செய்து 50 சதவீத வாக்குகளை பெறுவது என்ற அடிப்படையில் இந்த மாநாட்டில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு முழுமையாக, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக வெற்றிகரமாக தேர்தல் பணியாற்றுவது உள்ளிட்ட அனைத்து விதமான தேர்தல் வழிமுறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருந்த தமிழரான சி பி ராதாகிருஷ்ணனை இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்து தமிழக மக்களின் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்திய பிரதமர் மோடியின் செயலை மக்களிடம் கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்பட உள்ளது. நயினார் தலைமையில் நடைபெற உள்ள பூத் கமிட்டி ஆளும் திமுகவுக்கு ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர். எனவே, நெல்லை ஊக்கம்பட்டி பூத் கமிட்டி மாநாட்டிற்கு காவல்துறை மூலமாக திமுக அரசு மறைமுகமாக இடையூறுகள் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருநெல்வேலி பாஜக மண்டல பூத் கமிட்டி மாநாடு குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "திமுக தேர்தலின்போது அளித்த 285 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எஞ்சிய வாக்குறுதிகளிலும் உறுதி மட்டுமே அளித்திருக்கிறார்கள். அதை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். அந்த வகையில் பயிற்சி தரப்போகிறோம். திருநெல்வேலியில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாடு அரசியலில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும். இப்போதைய பாஜக பழைய பாஜக அல்ல, புதிய பாஜக" என்றார். உண்மைதான், பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்ற பின் அதிமுக- பாஜக இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டுள்ளது. இரு கட்சிகள் உறவில் நெருங்கமான உறவு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கட்சியினர் மத்தியிலும் புது உற்சாகம் பிறந்துள்ளது என்பது மறுக்க முடியாது. தேசிய பாஜக தலைவர்கள் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டு பாஜக தொண்டர்களின் நிர்வாகிகள் உற்சாகப்படுத்த உள்ளனர். எனவே, அமித்ஷாவின் திருநெல்வேலி பூத் கமிட்டி மாநாட்டு வருகை, தமிழக பாஜக தொண்டர்களில் மிகப்பெரிய எழுச்சியும் உற்சாகத்தையும் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags:    

Similar News