தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ்க்கு ஜாமின்!!

தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.;

Update: 2025-10-16 07:57 GMT

TVK Bail

கரூர் நெரிசல் வழக்கில் கைதான த.வெ.க. நிர்வாகிகள் மதியழகன், பவுன் ராஜ் இருவரும் நீதிமன்றக் காவல் முடிந்து, திருச்சி சிறையில் இருந்து காணொலி மூலம் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டாலும், சிபிஐ இன்னும் விசாரணை அதிகாரியை நியமிக்காததால் வழக்கு ஆவணங்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை, சிபிஐ வழக்கை ஏற்கும் வரை அவர்களின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழு வாதம் செய்தது. இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால் ஏற்கனவே கைதான த.வெ.க. நிர்வாகிகள் மதியழகன், பவுன் ராஜ் இருவரையும் ஜாமினில் விடுவித்து கரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருவருக்கும் காவல் நீட்டிப்பு செய்யாமல் விடுதலை செய்தது கரூர் நீதிமன்றம். இதேபோல் தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து கரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Similar News