நாளை சென்னை எழும்பூரில் போக்குவரத்து மாற்றம்!!

நாளை சென்னை எழும்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.;

Update: 2026-01-08 05:46 GMT

சென்னை எழும்பூர் பாந்தியன் ரவுண்டானா பகுதியானது 5 முனை சந்திப்பு மற்றும் 2 ரவுண்டானாக்களை உள்ளடக்கியதாகும். எனவே, அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை சீர்படுத்த தற்காலிகமாக நாளை (9-ந்தேதி) காலை 8.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. ருக்மணி லட்சுமிபதி சாலையானது பாந்தியன் ரவுண்டானாவிலிருந்து மாண்டியத் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும். ருக்மணி லட்சுமிபதி சாலையில் எத்திராஜ் சாலையில் இருந்து வரும் வாகனங்களை ருக்மணி லட்சுமிபதி சாலை மற்றும் மாண்டியத் சாலை சந்திப்பில் இருந்து இடதுபுறமாக திரும்பி மாண்டியத் சாலை வழியாக எழும்பூர் அருங்காட்சியகம் சர்வீஸ் சாலை சென்று பாந்தியன் சாலை வழியாக பாந்தியன் ரவுண்டானா செல்லலாம். மாண்டியத் சாலை மற்றும் மாண்டியத் லேனிலிருந்து வரும் வாகனங்கள் ருக்மணி லட்சுமிபதி சாலையின் இடதுபுறம் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Similar News