நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 121 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி..

பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் கே.என் நேரு ஆகியோர் வழங்கினர்.

Update: 2024-01-06 09:20 GMT

பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர்

 தமிழ்நாடு முதலமைச்சர் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 121 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து, நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மீதமுள்ள 111 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., நகராட்சி நிருவாக இயக்குநர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News